Wednesday, 14 October 2015

செவ்வாய் கிரகத்தில் பிரமாண்டமான புத்தர் சிலை

 பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ  மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய்  கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில்  அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா  உள்ளிட்ட பல்வேறு நாடுகள்  மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.

 அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி  அமைப்பான ‘நாசா’, செவ்வாய்  கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற  விண்கலத்தை இறக்கி உள்ளது.  செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி  ரோவர் எடுத்த புகைப் படத்தை ஆய்வு  செய்த  யுஎப்ஓ வேற்று கிரகவாசிகள்  குறித்து ஆய்வு செஎய்யும் அமைப்பு  ஒன்று செவ்வாய் கிரகத்தில்  பிரம்மாண்டமான புத்தர் சிலை ஒன்று  இருப்பதாக தகவல் வெளியிட்டு  உள்ளது.

நாசா அதில் செவ்வாய் கிரக  "மேற்பரப்பில்  வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான முக்கிய ஆதாரம்  ஒன்று வெளியாகி உள்ளதாக வேற்று கிரகவாசிகள் குறித்து ஆய்வு செய்து வரும் இணையதளம் தகவல் வெளியிட்டு உள்ளது.

ஒவ்வொரு முறையும் நாசா வெளியிடும் செவ்வாய் கிரகம் குறித்த புகைப்படங்களில் ஏதாவது ஒரு உருவம் இருப்பதாக அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் குறித்து ஆய்வு நடத்திவரும் இணையதளங்கள் கூறி வந்தன.

சமீபத்தில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் குறித்து ஆய்வு நடத்திவரும் இணையதள ஆசிரியர் அந்த இணையதளத்தில் செவ்வாய் கிரக மேற்பரப்பில் விண்கலம் ஒன்று  செயல் இழந்த நிலையில் இருப்பதாக தகவல் வெளியிட்டு இருந்தனர்.

தற்போது செவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான புத்தர் சிலை ஒன்று இருப்பதாகவும் இதன் மூலம் 'அறிவார்ந்த வாழ்க்கை முறை, அங்கு இருப்பதற்கான ஆதாரம் உள்ளதாகவும் பறக்கும் பொருட்கள் குறித்து ஆய்வு நடத்திவரும் அமைப்பு தகவல் வெளியிட்டு உள்ளது.

இந்த புகைப்படத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க விவரம், அதில் ஒரு முகம் காட்டுகிறது.  தலை வலது பக்கமாக திரும்பி உள்ளது. மார்பகங்கள் மற்றும் ஒரு பருமனான வயிறு, தோள்பட்டை.உள்ளது.