Sunday 17 May 2015


தம்ம தானம் - பகவான் புத்தர்

பகவான் புத்தர் தானம் வழங்குவதை அசாமி தானம், தம்ம தானம் என இரண்டு வகையாக கூறுகிறார்,

அசாமி
தானம் என்பது ஒருவருக்கு பொருளாக வழங்குவதலோ அல்லது, நல்ல உடை இல்லாதர்வகளுக்கு ஆடை கொடுத்தாலோ, அல்லது  பசியோடு இருப்பவர்களுக்கு உணவு அளித்தாலோ, அல்லது பணத்தால் உதவி செய்தாலோ, அல்லது மருத்துவ உதவிகள் செய்தல் ஆசாமி தானம் என்றும்,  இவை சிறிது நேரம் அல்லது சில காலம் மட்டுமே பயன்படகூடியதாகவும், அப்போதைய தேவைகளை பூர்த்தி செய்யகூடியதாக மட்டுமே உள்ளது என பகவான் புத்தர் கூறுகிறார்

தம்ம தானம் என்பது ஒருவர் தன் வார்த்தையின் மூலம் அடுத்தவரின் வாழ்க்கையை நல்ல முறையில் மாற்றகூடிய, முன்னேற்றகூடிய, நல்ல சூழலை உருவாக்ககூடிய தம்ம உபதேசத்தை எடுத்து கூறுவது தம்ம தானம் என்றும் இவை ஒருவரின் தன் காலம் முழுக்க மற்றும் தன் வருங்கால சந்ததிற்கும் கொண்டு செல்வதால் பல காலம் பயன்படக்ககூடியாத விளங்குகிறது என பகவான் புத்தர் கூறுகிறார்

இதனால் நாம் ஒவ்வொரும் தம்மத்தின் வழயில் நடந்து தம்மத்தை மற்றவர்களுக்கு கொண்டு சேர்ப்பதின் மூலம் நமக்கு இம்மையிலும் மறுமையிலும் புண்ணியம் சேர்கிறது

பகவான் புத்தர் பெற்ற மெய்ஞானதை, ஊர் ஊரக சென்று மக்களுக்கு தினந்தோறும் தம்ம தானம் செய்தார்(தியானம், உபதேசம்), அதனால் கோடானு கோடி மக்கள் தன் வாழ்க்கை சூழலை செம்மைபடுத்தி, பயன்பெற்று இன்புற்று வாழ்ந்தனர், வாழ்கின்றனர், இப்படி சேரும் புண்ணியம் தான் 2500 வருடங்கள் கடந்து இன்று மக்களின் முன்னால் கடவுளாக, குருவாக, வழிகாட்டியாக நிலைத்து நிற்கிறார்... பகவான் புத்தர்


புத்தம் சரணம் கச்சாமி
– மெய்ஞானம் பெற்ற பகவான்
புத்தரை சரணடைகிறேன்

தம்மம்
சரணம் கச்சாமி
– மெய்ஞானதினால் தம்மம் வெளிப்பட்ட தம்மதிடம் சரணடைகிறேன்

சங்கம் சரணம்
கச்சாமி
– தம்ம தானம் செய்யும் பிக்குகளின் சங்கத்திடம் சரணடைகிறேன்






















நன்றி பிக்கு ரத்தினபால